சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மனோகரா கார்னர் காமராஜர் சிலை முன்பு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகி பழ.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தீரன், சின்னமலை குறிப்பிடத்தக்கவர். கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆதிக்கத்தை விரும்பாத
சின்னமலை தொடர்ந்து எதிர்த்து வந்தார். தீரன் சின்னமலையை போரில் முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து சின்னமலையை செய்து சங்ககிரிக் கோட்டைக்கு அழைத்துச் சென்று விசாரணை தூக்கிலிட்டனர்.
தீரன் சின்னமலை தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் அவரது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.