கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பால்குட திருவிழா- ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஊராணி காளியம்மன் ,ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுங்க கேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து, மேல தாளங்கள் முழங்க பால் குடத்தை தலையில் சுமந்து வாரு, ஊர்வலமாக தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து மூலவர் ஊரணி காளியம்மன் துர்க்கை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத பால்குட திருவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.