கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த வெளியில் தண்ணீர் இருக்கிறதா, திறந்துள்ள தண்ணீர் தொட்டிகளில் லார்வா கொசு புழுக்கள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்தனர்.
கொசுக்கள் இருக்கும் பகுதிகளுக்கு கொசு மருந்து அடிப்பது, தண்ணீர் தொட்டிக்குள் மருந்துகள் ஊற்றும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நல்ல தண்ணீரில் லார்வா உற்பத்தியாகும் என்றும், வீட்டிற்குள் தண்ணீர் தேக்கி வைக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்படாத நிலையில், டெங்குவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.