கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேல தாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி என்கின்ற பூசாரி விவசாயி கூலி தொழிலாளி. இவரது மகன் சதீஷ்(22). தனது தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் இன்று கார்த்திகை மாதம் 3வது திங்கட்கிழமை சோம வாரத்தினை முன்னிட்டு மலையில் மலை உச்சியில் உள்ள சிவனை தரிசிக்க மலை படிக்கட்டுக்களில் ஏறி நடந்து சென்றுள்ளார். படிக்கட்டில் நடந்து சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக
கூறியுள்ளார். உடன் சென்ற நண்பர்கள், சகோதரர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர் அப்போது மருத்துவர் பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதனை அடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.