கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளைஅ வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள். இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், மணவாடி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கருப்பு பட்டையை அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர் தமிழ் மணியன் கூறும் போது, தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து
செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்ததை நடப்பு கூட்ட தொடரில் விதி எண் 110 இன் கீழ் கொண்டு வர வேண்டும்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது போடப்படும் போக்சோ பொய் வழக்கினை ரத்து செய்து ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கி வந்த ஊக்க ஊதியங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பழைய முறைப்படி உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.