உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும், அரசு வேலையில் காதுகேளாதோர் வாய் பேசாதோர் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து அலுவலகங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், காது கேளாதோர் வாய் பேசாதோர் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு இலவச வீடு மற்றும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி சைகை மொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….
- by Authour
