கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு செலவில் கைபேசி சிம்கார்டு இணையதள சேவைக்கு சேவைக்குரிய பணம் வழங்காமல் களஞ்சியம் செயலியில் விடுப்பு மற்றும் GPF விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மிரட்டும் சர்வாதிகார நடவடிக்கை கண்டித்தும், களஞ்சியம் செயலியில் அரசு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் விடுப்புகள் gpf விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு விதிகளுக்கு முரப்பாக கருவூலத்துறை ஆணையர் அதிகார மிரட்டல்,ஊதியம் வழங்கும் அலுவலர்களை அதிகாரம் அற்றவர்களாக மாற்ற முயற்சி செய்து வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.