கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய 3ம் கட்ட போராட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்புறம் அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இரவிலும் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மாலை 6 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.