கரூர் மாவட்டம் வேலாயுதபாளையம்,தவுட்டுப்பாளையம் பகுதியில் வெற்றிலை விவசாயம் பிரதான தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை விவசாய சாகுபடி நடைபெற்றும் தற்பொழுது குறைவான ஏக்கரில் வெற்றிலை விவசாயம் சாகுபடி நடைபெற்று வருவதாகவும்,
தற்பொழுது வெயிலின் தாக்கத்தால் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக நீர் வரும் நிலையில் விவசாயத்திற்கு புகலூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததாலும் வெற்றிலை காய்ந்து வருகிறது
பல லட்ச ரூபாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுத்த வேண்டும் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெற்றிலையில் பூச்சி, நோய் தாக்குதலால் உற்பத்தி செய்ய முடியவில்லை சரியான விலை விற்பதில்லை விலை விற்கும் பொழுது வெற்றிலை கிடைக்கவில்லை
வெற்றிலை விவசாயிகள் நாளுக்கு நாள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது
காவிரியில் ஏற்கனவே தண்ணி இல்லாத சூழ்நிலையில் வெற்றிலை தற்பொழுது காய்ந்து உள்ள சூழ்நிலையில் வெற்றிலை தற்பொழுது நல்ல விலைக்கு விற்கப்பட்டாலும் போதிய அளவில் வெற்றிலை கிடைக்காததால் பல லட்சம் இழப்பை சந்தித்து வரும் விவசாயிகள்
ஏழு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்புகளை சந்தித்து வருகிறோம். வெற்றிலையில் மருத்துவ
குணம் அதிகமாக உள்ளதால் வெற்றிலையை மூலப் பொருளாகக் கொண்டு மருந்து தயாரிக்கும் பணியினை அதற்கான ஆய்வுகளை அரசாங்கம் செய்வதற்கு முன்னெடுத்து சென்றால் இந்த வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற முடியும் வெற்றிலை விவசாயிகளையும் காப்பாற்ற முடியும் வெற்றிலையில் இருந்து மருந்து பொருட்களை தயாரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.