தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து கரூரில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென்று லேசான காற்று மற்றும் இடி
மின்னலுடன் கரூர் மாநகரம், தாந்தோணிமலை, ராயனூர், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து வீடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்