கரூர் மாவட்டம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டிக் கோட்டை, ஈசநத்தம், மலைக்கோவிலூர் உள்ளிட்ட பள்ளிகளில் 364-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். பின்னர் எம்.எல்.ஏ
இளங்கோ பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயமாக நூலகம் இருக்க வேண்டும் அதற்கு தமிழக முதல்வர் திட்டம் அறிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு மதுரையில் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது தற்பொழுது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் படிப்பதற்காக உருவாக்கி உள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். மாணவர்களுக்கு வேண்டுகோளாக தலைமை ஆசிரியர் மாணவர்களை மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நூலகத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்கள் கண்டு களிக்க வேண்டும் என மாணவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.