Skip to content
Home » கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

கரூர்- ஈரோடு சாலை பாலிடெக்னிக் பகுதியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் எஸ்ஐ தேர்வுக்கான மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பயிற்சி ஆசிரியர் கவின் குமார் Ceo மாணவர்களுக்கு குறைந்த செலவில் கேண்டீன் வைத்து மூன்று வேலையும் உணவு தயாரித்து வருகிறார். மேலும் ,பொருளாதாரப் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வரும் பயிற்சி ஆசிரியருக்கு மாணவர்கள் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது திடீரென இரண்டு நாட்களுக்கு பயிற்சி ஆசிரியருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு நீண்ட நாட்களாக மனைவி புவனா மற்றும் சஞ்சனா மகளை சந்திக்காமல் பயிற்சி மட்டுமே குறிக்கோளாக இருந்த நிலையில் மனைவிக்கும், பயிற்சி ஆசிரியர் கவின் குமார்  இருக்கும் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை உணர்ந்த பயிற்சி மாணவர்கள் பயிற்சி ஆசிரியர்  கவின் குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து பயிற்சி ஆசிரியர் கவின் குமார்  பெண் பிள்ளையின் முதல் பிறந்தநாள் விழாவை கல்லூரியில்  ஏற்பாடுகள் செய்து பரமத்தி உள்ள பயிற்சி ஆசிரியர் மனைவி மற்றும் மகளை அழைத்து வந்து  ஆசிரியர் கவின் குமார் இன்ப அதிர்ச்சியை குடுத்தனர். மேலும்

அவர்களை வரவேற்கும் விதமாக வான வேடிக்கை பட்டாசுகளை வைத்து கொண்டாட்டத்தை ஈடுபட்ட நிலையில் பிரம்மாண்ட கேக் தயார் செய்து பட்டு முதல் நாள் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மேலும் மாணவர்கள் இணைந்து பயிற்சி ஆசிரியர்களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் பிறந்தநாள் குழந்தைக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர் நம்மிடம் பேசும்போது- என்னால் காவல் பயிற்சிக்கு முயற்சி செய்து உடல் தகுதி குறைபாடு காரணமாக நீக்கப்பட்ட நிலையில் நான் அப்போது முடிவு செய்து தற்போது வரை போலீஸ் காவலர் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த சத்தான ஆரோக்கியமான உணவுகளை வழங்கி அவர்களுக்கு முடிந்த உதவிகளையும் செய்து வருகிறேன்.
மேலும், எனக்கு மாணவன் நலம் மட்டுமே முக்கியம் இந்நிலையில் எனது குடும்பத்தில் என் மனைவி என் பணி சுமையை பொருட்படுத்தாமல் சிறு, சிறு பிரச்சனைகளும் என் வாழ்வில் ஏற்பட்டது. அதையும் சமாளித்து மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே முக்கியம் என நினைத்து தற்போது வரை மாணவர்களை நான் முடிந்தளவு பணியாற்றி வருகிறேன். மேலும், மாணவர்கள் இன்று எனக்கு ஏற்படுத்திய நிகழ்வை வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மாணவ செல்வங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்த மேலும் அவரது மனைவி பேசுகையில் எனது கணவர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார். மேலும் எந்த நேரமும் மாணவர்கள், மாணவர்கள் என்ற நினைப்பில் இருப்பதால் குடும்பத்தை கவனிப்பது இல்லை என குற்றச்சாட்டை நான் வைத்ததுண்டு. இந்நிலையில் இங்கு வந்து பார்க்கும் பொழுது எனது கணவரின் உழைப்பு மற்றும் உன்னதமான பணி தெரிகிறது. இனி நான் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன். மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே முக்கியம் என கருதி பணியாற்றி வரும் எனது கணவருக்கு எனது வாழ்த்துக்களையும், தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் பயிற்சி பள்ளி  மாணவனின் ஒருவர் பேசும் பொழுது எங்கள் பயிற்சி ஆசிரியர் எங்களுக்கு அளித்த வரும் உற்சாக மற்றும் உணவு உளித்த பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நாங்கள் எங்கள் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்து தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். பயிற்சி ஆசிரியர் பயிற்சியின் போது ஆசிரியராகவும், பயிற்சிக்கு பின் நல்ல நண்பனாகவும், உணவு  வாங்குவதில் நல்ல தந்தையாகவும் திகழ்கிறார். இத்தகைய பயிற்சி பள்ளியில் படிப்பது எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
சில கல்லூரிகளில் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பனிப்போர் நிலை வரும் நிலையில் கரூர் பாலிடெக்னிக் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ் அகாடமியில் மாணவர்களுக்காக பணியாற்றி வரும் பயிற்சி ஆசிரியருக்காக, ஆசிரியரின் பெண் பிள்ளை முதல் பிறந்தநாள் விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடிய மாணவர்களை பாராட்ட தானே வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!