கரூர் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் பிரதீப் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று கிருஷ்ண ஜெயந்தி ஓட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் வீட்டில் இருந்துள்ள மாணவன், அருகில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக உறவுக்கார சக நண்பனுடன் சென்றுள்ளார்.
இருவரும்சென்ற நிலையில் பிரதிப் கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் பிரதீப் கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் சென்ற நண்பர் அளித்த தகவலின் பெயரில் உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். உடலானது கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.