கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது உறவினர்களான அசோக் குமார் (17),சதீஷ்குமார் (32)பிரகாஷ் (27) ஆகியோருடன் நங்காஞ்சி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள நங்காஞ்சி ஆற்று தடுப்பணையில் வழிந்து ஓடும் ஆற்று நீரில் குளித்தார். அப்போது தடுப்பணையில் தவறி, விழுந்து மூழ்கிவிட்டார். அருகில் இறந்தவர்கள் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் வந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரம் தேடிய நிலையில் மாணவனை சடலமாக மீட்டனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.