திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் – கன்னியம்மாள் ஆகியோரின் மகன் ரஞ்சித்குமார் (22). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், திருப்பூர் மாவட்டம், ஏழுமலை – ஈஸ்வரி ஆகியோரின் மகள், ஜெயலட்சுமி (19) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர்
காதலித்து வந்துள்ளனர் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியார் கொள்கைகளை பின்பற்றி வரும் ரஞ்சித்குமார் பெரியார் ஆதரவாளர்களிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பெரியார் சிலை முன்பு நேற்று மாலை ரஞ்சித்குமார் – ஜெயலட்சுமி ஆகிய இருவரும் பெரியார் ஆதரவாளர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டனர் தொடர்ந்து ரஞ்சித் குமார் காதலி ஜெயலட்சுமிக்கு தாலி கட்டினார் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.