கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று மாலை கடற்கரையில் சூரசம்கார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் இன்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால்
பாலமுருகனுக்கு அபிஷேகமும் அதற்கு முன்பாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்கள் நாமாவளிகள் கூறினார். தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக நடைபெற்று வரும் கந்தசஷ்டி கவச சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.