கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக கடந்த 12ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது
சிவாச்சாரியார்கள் பல்வேறு மூலிகை பொருட்களைக் கொண்டு நான்கு கால யாக பூஜைகள் மஹா பூர்ணாஹீதியுடன் நிறைவு பெற்று புனித நீர் கலசத்திற்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு விமான கலசத்திற்கு
புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகுமார்சியாக நடைபெற்றது
கலசத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை சித்தி விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருப்புசாமி தலைமையில் அறக்கட்டளையினர் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.