விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில்
இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், மஞ்சள், தயிர், இளநீர்,கரும்புச்சாறு,பஞ்சாமிர்தம்,திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் உடன் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் காட்சியளித்தார் பின்னர் கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.