Skip to content
Home » கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அனுமன் ஆலயங்களில் காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலைகள் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு லட்சுமி கணபதி ஹோமம், தென்முக ஆஞ்சநேயர்

மூல மந்திர ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக தென்முக ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், வெண்ணெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும், அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் ஆஞ்சிநேயருக்கு வடமாலை சாற்றி தொடர்ச்சியாக உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இரயில்வே காலனி கரூர் தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் துளசி, மஞ்சள், தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு தொடர்ச்சியாக அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.