கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சங்கரன் மலைபட்டியில் சௌந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலை குன்றின் மேல் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆனது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். மேலும் இக்கோவிலில் பொன்னர் சங்கர் திருமணம் நடைபெற்று வழிபட்ட கோவில் ஆகும். மலை குன்றின் உச்சியில் உள்ள இக்கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. மலைகுற்றின் உச்சியில் சுமார் 600 லிட்டர் நெய்யும், 500 மீட்டர் தெரியும் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மகாதீபாரனை கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.இதில் சங்கரன் மலைப்பட்டி சுற்றுலா ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரோகரா அரோகரா, ஓம் நமச்சிவாய என கோஷங்கள் முழங்க மகாதீபாரதனை கண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.