தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகி, அலங்காரவல்லி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பிரத்தேக யாக சாலை அமைத்து யாக வேள்வி
நடத்தினார். அதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓதியபடி மேள தாளங்கள் முழங்க கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு மொய் வைக்கும் நிகழ்வும், பால்,பழம் வழங்கும் நிகழ்வும், சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் லட்டு உள்ளிட்ட இனிப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பித்தனர். ஆடி மாத திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.