கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி இன்று கொடுமுடி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து தீர்த்தம் கொண்டு வந்து கரூர் தான்தோன்றிமலை சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
அதை தொடர்ந்து அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை, ஒட்டகம் முன் செல்ல பல்வேறு வண்ண கலை நிகழ்ச்சிகளுடன், வானவேடிக்கையுடன் தான்தோன்றி மலை முக்கிய சாலையில் வழியாக சுட்டெரிக்கும்
வெயிலிலும் பொருட்படுத்தாமல் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் காளியப்பனூர் பகவதி அம்மன் வந்தடைந்தனர்.
அதை தொடர்ந்து ஆலயம் வளம் வந்த பிறகு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை ஆலயத்தில் வைத்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காளியப்பனூர் கொத்துக்காரர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து நாளை ஆலயத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு, அதைத் தொடர்ந்து முதல் கால யாக வேள்விகள் துவங்குகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.