கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கடந்த 2-ம் தேதி மாரியம்மன் கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி பகவதி அம்மன் கரகம் ஆலயம் வந்தடைந்தது. இந்நிலையில் நாள்தோறும் முத்து மாரியம்மன் பல்வேறு வாகனத்தின் திருவீதி உலா காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் முத்து மாரியம்மன் காக பால்குடம், அக்னி சட்டி, அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அமராவதி ஆற்றில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதியில் வழியாக ஆலயம் வந்தடைந்தது. ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி
திருவிழாவில் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதி திருவிழாவை சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நீர்மோர், கம்மங்கூழ், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்துதல், தீமிதி திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடுகளை ஆலய கொத்துக்காரர் உள்ளிட்டு பல்வேறு நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தாந்தோன்ற மழை போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.