கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தங்க தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதன்
தொடர்ச்சியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.
அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி மாரியம்மன் காட்டிய பிறகு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.