கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், சுவாமி
திருவீதி உலாவும், வரும் பத்தாம் தேதி அன்று திருக்கல்யாண உற்சவம், திருத்தேரோட்டம் வரும் 12- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை ஒட்டி, அதிகாலை முதலே பக்தர்கள், கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் குவிந்தனர். பிறகு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.