கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் திருநங்கை வினோதினி, அமைத்து வழிபட்டு வருகின்றார். இக்கோவிலுக்கு கோவை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான திருநங்கைகள் வந்து வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு 17ஆம் ஆண்டு தீமிதி மற்றும் மயான கொள்ளை இடுதல் திருவிழா தொடங்கி நடைபெற்றது.
இதில் கடந்த 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழா தொடங்கியது. அன்று இரவு ஏராளமான
திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து 2வது நாள் சனிக்கிழமை இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.
இரவு திருநங்கை வினோதினி, அம்மன் வேடம் அணிந்து அருள் அழைத்து கொண்டு கோவில் வளாகம் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் முன் அரக்கி உருவம் வடிவில் அமைக்கப்பட்டிருந்தில் மயான கொள்ளை இடுதல், தொடர்ந்து குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.