தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் தம்பி உத்தரவிட்டது. அதன்படி கரூர் எஸ்.பி ஆக இருந்த பிரபாகர் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா 33- வது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பதவியேற்றார். முன்னதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த எஸ். பி ஃபெரோஸ்கான் அப்துல்லா ஆயுதப்படை காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் எலுமிச்சை கனி மற்றும் பூங்கொத்து கொடுத்து அவரை இன்முகத்துடன் வரவேற்றனர்
