கரூரை அடுத்த ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு புனித தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
கரூர் மாநகரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்புறம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குடம் மற்றும் முளைபாரியை தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்ட ஊர்வலம் தலைமை தபால் நிலையம், ஜவஹர் பஜார், பேருந்து நிலையம்
ரவுண்டானா, கோவை சாலை, ஈரோடு சாலை வழியாக சுமார் 7 கி.மீ தூரத்திற்கு அந்த ஊர்வலம் சென்று கொண்டுள்ளது. இதில் ரேக்ளா மாட்டு வண்டி, பசு மாடு கன்றுக்குட்டியுடன், ஜல்லிக்கட்டு காளைகளையும், ஊர்வலத்தின் முன்பு அழைத்துச் செல்கின்றனர். மேலும், கோபுர உச்சியில் வைக்கக் கூடிய கலசத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சுமார் 7 கி.மீ நடந்து செல்கின்றனர். இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.