Skip to content
Home » கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மதுபான கூடங்கள் வசதியுடன் 70 சதவீதத்துக்கும் மேலான கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி இரவு, பகலாக இயங்கி வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் எதிர்புறம் அமைந்துள்ள மதுபான கூடம் மற்றும் செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுபான கூடம் ஆகிய இரண்டு இடங்களிலும் அரசு அனுமதித்த நேரத்தை மீறி வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை வெளியிட்டு விதி மீறி செயல்படும் மதுபான கூடத்தின் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *