Skip to content
Home » கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

  • by Authour

கரூரில் பாதரசலிங்க சிவன் கோவிலில், சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் – சிவன் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சிவனடியாராக மாறியது குறித்து நெகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அலெக்சி என்பவர் இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்த நிலையில், அதிகமான சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார்.

நாளடைவில் சிவனடியாராகவே மாறிய அலெக்சி, ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்ற ஜோதிடரின்

நட்பு ஏற்பட்டு, அவர் ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தனது நண்பர்களான அலினா, ஆர்டியோட், திமு, ஆனா ஆகியோருடன் சேர்ந்து 20 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாடு வந்துள்ள ஐந்து பேரும் சிவனடியாராக மாறிய நிலையில், மித்ராநந்த தேவ், அருணிமாதேவி, தேஜாநந்தி, சிவானந்தா என ஆன்மீகப் பெயர்களை சூட்டிக் கொண்டுள்ளனர்.

20 நாள் பயணத்தில் ராமேஸ்வரம் நவகிரக ஸ்தலங்கள் பழனி உத்தரகோசமங்கை திருநள்ளாறு சனீஸ்வரன் வைத்தீஸ்வரன் அகத்தியர் கோவில் குற்றாலம் என தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்வேறு சிவ தளங்களுக்கும் முருகன் கோவில்களுக்கும் சென்று வருகின்றனர் 18 வது நாளான இன்று ஜோதிடர் கோபிநாத் உதவியுடன் கரூர் வந்த ஐந்து பேரும் கரூர், வெண்ணைமலையில் அமைந்துள்ள பாதரசலிங்கத்தை தரிசித்தனர்.

அங்கு வழிபாடு நடத்திய அவர்கள் பாதரலிச லிங்கம் அமைந்துள்ள தியான மண்டபத்தில் சிவ ஸ்தோத்திரம் கூறி தியானம் செய்தனர். தமிழகத்திற்கு 20 நாட்கள் ஆன்மீக பயணம் வந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை மிகவும் பிடித்துள்ளதாகவும், சிவனடியாராக மாறியது குறித்தும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *