கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பொன்னாவரம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சேவல் சண்டை நடத்தி வந்த முருகேசன் 35, முருகேசன் 29, பிரேம்குமார் 24, சத்யராஜ் 21, ராஜேஷ்குமார் 35, ராஜ் 60 ஆகிய ஆறு நபர்களை கைது செய்தனர்.
மேலும் நொய்யல் பகுதியைச் சேர்ந்த பாலு மற்றும் அத்திப்பாளையத்தை சேர்ந்த பூபதி இரண்டு நபர்கள்
அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களிடமிருந்து 600 ரூபாய் பணம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை கைப்பற்றப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.