கரூரில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை ஆட்சியர் தங்கவேல் கொடியைசத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காளியப்பனூர் வழியாக மாவட்ட விளையாட்டு திடலில் நிறைவடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சிறுதானிய உணவு வகைகள்
மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்