Skip to content
Home » கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது .

அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்‌. இந்த நிலையில் கரூர் மாவட்டம் பவித்திரம் அருகே ரிச் இந்தியா ஹை டெக் சிட்டி என்ற பெயரில் கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டாவாக பிரித்து சுமார் 20 கோடி மதிப்பில் ஆன 10 ஏக்கர் 19 சென்ட் இடத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் தொடரப்பட்ட நிலையில் கடந்த 2012ம்

ஆண்டு கோவில் நிலம் என அறிவிக்கப்பட்டு அதனை திருக்கோவிலுக்கு ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற ஊழியர் சரவணன், இந்து அறநிலை துறை இணை ஆணையர் ஜெய் தேவி மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள், காவலர்கள் உடன் நிலத்தை கையகப்படுத்தி கோவில் வசம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!