கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த இடத்தில் புதிய சாலை அமைக்கப்படாமல் விடுபட்ட காரணத்தால் நேற்று பெய்த மழையில் மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. இதனால், அந்த
வழியாக கரூர், வாங்கல், நெரூர், பசுபதிபாளையம், செல்லக்கூடிய சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். சாலை குண்டம் குழியுமாக மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.