Skip to content
Home » கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் அண்ணா வளைவு அருகே கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீர் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை

பைப்பில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட இந்த பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு பள்ளம் மூடப்பட்டது.

இதில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வந்தன. மண் சாலையாக இருந்ததால் மழை நீர் தேங்கியது இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில், ஏற்கனவே விழுந்த பள்ளத்தில் சிறிது தூரத்தில் மீண்டும் பள்ளம் விழுந்தது. இதனால் சாலையை இரு பக்கமும் பேரிக்கார்டுகள் கொண்டு மூடப்பட்டது. இதனால் கரூரிலிருந்து வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அண்டை மாவட்டமான நாமக்கல் மாவட்டம் மோகனூர், நாமக்கல் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!