தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றி உள்ள இடங்கள் தற்காலிக கடைகள், தரைக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வருகை தந்துள்ளனர். இதில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், நகைக்
கடைகள்,காலணி கடைகள், வளையல் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் சாலை ஓரமாக தரைக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்த நிலையில் காவல்துறை சார்பில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி இல்லை எனவும் ,போக்குவரத்து அதிகம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட தரைக்கடைகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.