தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இன்று கரூர் மாநகரில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென மாலை 3,30 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
கரூர் மாநகர பகுதியான பசுபதிபாளையம், காந்திகிராமம், ஜஹகர்பஜார், தான்தோன்றிமலை, சுங்ககேட் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போது பெய்து வரும் மழையால் கரூர் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணிந்தால் இரவில் நிம்மதியாக தூங்க முடியும் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மக்கள்.