கரூர் மாவட்டம், மாநகர பகுதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்தது.
பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் இரவில் சுமார்
இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் மழைநீர் சாலைகளில் வெள்ள நீராக ஓடியது. தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருந்தாலும் மழை பெய்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்றே சிரமம் அடைந்தனர்.