கரூரில் ரயில்வே தண்டவாளம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று முதல் 2 பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கம், கரூரிலிருந்து திருச்சி வரை இயங்காது என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்த நிலையில் வீரராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் அருகில் அரசு பேருந்தில் பயணிகள் அதிகளவு கூட்ட நெரிசல்.
கரூர் ரயில் நிலைய தண்டவாளம் பராமரிப்புப் பணிகள், பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று ரயில் எண். 06810 ஈரோட்டிலிருந்து திருச்சிராப்பள்ளி வரை செல்லும் ரயில், ஈரோட்டிலிருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
கரூர்-திருச்சிராப்பள்ளிக்கு இடையே இயக்கப்படாது. அதே போன்று ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளியிலிருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் அந்த ரயில் திருச்சிராப்பள்ளி – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக கரூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும்.
ரயில் எண்.06611 திருச்சிராப்பள்ளியிலிருந்து ஈரோடு வரை செல்லும் ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில், வீரராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் ரயிலில் பயணித்த பயணிகள் அருகில் அரசு பேருந்தில் கூட்ட நெரிசலில் ஆபத்தான முறையில் தொங்கியபடி கரூருக்கு வேலைக்கு சென்றனர்.
கரூரில் பணிகள் நிறைவடைந்த பிறகு, வீரராக்கியத்திலிருந்து ஈரோட்டிற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.