தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசிக்கு முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவரது பைனான்ஸ் நிதி நிறுவனம் மற்றும் கேவிபி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு என கரூர் மாநகரில் மூன்று இடங்களில் நேற்று அதிகாலை 6:00 மணியிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகளின்
சோதனை தொடர்ந்து நடைபெற்றது. இதே போல் கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சக்திவேல் என்பவரது வீட்டில் நேற்று தொடங்கிய சோதனை மாலை 6 மணி அளவில் முடிந்தது.
கரூரில் மூன்று இடங்களில் தொடர்ந்து இரண்டவது நாளாக சோதனை சோதனை நடைபெற்று வருகிறது, அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் எனவும், அதன் அடிப்படையில் தொடர் சோதனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.