Skip to content
Home » கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

  • by Senthil

இமானுவேலு சேகரனின் 66-வது நினைவு நாளையொட்டி கரூர் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும்  அனைத்து கட்சியினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்த அமைப்புகளை சேர்ந்த சமுதாய இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் அமைப்பின் கொடி கம்பத்துடன் கரூர் மாநகரில் முக்கிய வீதிகள், சாலைகள், பேருந்து நிலையம் முக்கிய இடங்களில் அதிவேகத்தில் ரேசிங் சென்றனர். சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும்

வகையில் அதி வேகமாக சென்று  போக்குவரத்துக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினர்.

இதையடுத்து வெங்கமேடு மேம்பாலத்தில் சட்ட விதியை மீறி சாலையில் அதிவேகமாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ரேசிங் சென்ற இளைஞர்களை போலீசார் தடுத்தனர். போலீசார் தடுத்தும் கட்டுப்படாமல் சாலையில் தாறுமாறாக சென்றனர். இதையடுத்து போலீசார் இளைஞர்களை தடுத்து நிறுத்தி தர்மஅடி  போட்டனர் அப்போது வெங்கமேடு காவல் ஆய்வாளர் சரவணன் இளைஞரை  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். மேலும், இந்த இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!