கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானங்களை விற்பனை செய்த அவரை கைது

செய்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் ரஷ்யாசுரேஷ், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.