கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிமுறை வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் என்று தொடங்கி வைத்தார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 152 தனியார் தொழில் நிறுவனங்கள் வந்திருந்தனர். தனியார் நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணிக்காக பட்டதாரி மாணவ,
மாணவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பணிக்கான ஆணை வழக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வேலையில்லா பட்டதாரிகளும், மற்றும் திண்டுக்கல் திருச்சி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 3000 வேலையல்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.