Skip to content

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு தீயணைப்பு

வாகனங்கள் உதவியுடன் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாநகரின் மையப் பகுதியான இந்த பகுதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு வணிக வளாகங்கள் நிறைந்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஐஸ்கிரீம் கடை அமைந்துள்ள பகுதியில் முன்புறம் அமைந்துள்ள எவர்சில்வர் கடையில் தீ விபத்தால் ஏற்பட்ட புகை அங்கும் பரவி உள்ளதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!