கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள பைப் மற்றும் ஒயர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 23.12.24 ம் தேதி அடையாளம் தெரியாத நான்கு வட மாநில பெண்கள் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது கடையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட பெண்களில், ஒரு பெண் மட்டும் உள்ளே சென்று ஒயர்கள் மொத்தமாக அடுக்கி வைத்திருக்கும் குடோன்
இருக்கு இடத்திற்கு சென்று, அங்கிருந்த ஒரு பெட்டியை மட்டும் துணியில் சுருட்டிக்கொண்டு தூக்கி சென்றுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர் பகுதியில் கை குழந்தைகளுடன் பொது இடங்களில் யாசகம் பெறுவதைப் போல சுற்றி திரியும் வட மாநில பெண்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.