Skip to content
Home » கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு சமையல் செய்யும் சமையலறையில் உதவியாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை எஜ்ஜம்மாள் தான் தங்கி இருந்த அறைக்கு பின்புறம் நடந்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தளவாபாளையம் மாரியம்மன் கோவில் நிலத்தில் சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியை பிடித்ததார்.

அப்போது கம்பி வேலிக்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியில் நேற்று மழை பெய்த போது தென்னை மட்டை விழுந்து அதன் வழியே கம்பி வேலியில் மின் கசிவு ஏற்பட்டுகொண்டிருந்தது. அதன் காரணமாக மின்சாரம் தாக்கி எஜ்ஜம்மாள் கீழே விழுந்துள்ளார் . அப்போது உடன் வேலை பார்க்கும் சரோஜா என்பவர் எஜ்ஜம்மாள் கீழே விழுவதை பார்த்து அங்கு இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார் . அதன் பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எஜ்ஜம்மாளை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எஜ்ஜம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்தனர். இப்புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து எஜ்ஜம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!