கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை கடந்த 8 ம் தேதி இரவு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக மது போதையில் கடையை அடித்து உடைத்துள்ளனர்.
மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த பாப்பணம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வழிமறித்து கடுமையாக தாக்கியதில் பாப்பனம்பட்டியை சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் கஞ்சா மது போதையில் தாக்கிய வேப்பங்குடியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துவிட்டு மற்ற 10க்கு மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனக் கூறி இன்று காணியாளம்பட்டி, உடையாபட்டி, தரகம்பட்டி, சுண்டுக்குளிப்பட்டி, மையிலம்பட்டி உள்ளிட்ட உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இன்று இந்த சம்பவத்தை கண்டித்து, 500 க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்து
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், உடனடியாக அந்த இளைஞர்களை கைது செய்ய வேண்டும், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி காவல்துறையை கண்டித்தும் கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தாசில்தாரிடம் மனு கொடுத்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர்.
குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.