‘சங்கி பிரின்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த நாமக்கல் பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலை கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கரூர் சைபர் க்ரைம் போலீசார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை கைது செய்தனர். பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் ராஜை சைபர் கிரைம் போலீசார் கரூர் அழைத்து வந்துள்ளனர்…