கரூர் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளி சார்பில் பிளாஸ்டிக்கு இல்லாத உலகம் படைப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கரூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இந்தப் பேரணி பஸ் நிலையத்தில் துவங்கி திண்ணப்பா கார்னர் ,சர்ச் கார்னர், தலைமை தபால் நிலையம், ஜவகர்பஜார் வழியாக கருர் திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவுற்றது. விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் ஏன கோஷங்களை பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் வலியுறுத்தினர்.
கரூரில் பிளாஸ்டிக் இல்லா உலகை படைப்போம்…. மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி…
- by Authour
