Skip to content

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்று இலவச

வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்தில் 534 பயனாளிகளுக்கும், புகழூர் வட்டத்தில் 356 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சி வட்டத்தில் 289 பயனாளிகளுக்கும், குளித்தலை வட்டத்தில் 654 பயனாளிகளுக்கும், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டத்தில் 585 பயனாளிகளுக்கும் என மொத்தம் 2418 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இன்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!